அரைப்புளிக் குழம்பு
தேவையான பொருட்கள்

புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயம் - கொஞ்சம்
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
வேர்க்கடலை - கொஞ்சம்
சாம்பார் வடகம் அல்லது அப்பளம் - 1
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
சேனைக்கிழங்கு அல்லது கத்திரிக்காய் - 4
எண்ணெய் - 5 தேக்கரண்டி

செய்முறை

புளியை ஊறவிட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து வேர்கடலை போட்டு சாம்பார் பொடி போட்டு பிரட்டி புளி தண்ணீர் விடவும்.

உப்புப் போட்டு காய்களை நறுக்கிப் போடவும்.

சாம்பார் வடகம் அல்லது அப்பளம் வறுத்து வைத்துக் கொண்டு இறக்கும் போது போடலாம்.

அரிசி மாவு அல்லது கடலை மாவு கரைத்து ஊற்றி சேர்த்து கொதித்ததும் இறக்கி கருவேப்பிலை போடவும்.

தேங்காயை சிவக்க வறுத்துப் போடவும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com