பொரிகடலை மாவு உருண்டை
தேவையான பொருட்கள்

பொரிகடலை
(பொட்டுக்கடலை) - 1 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
நெய் - 1/8 கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு
வறுத்து ஒடித்த
முந்திரிப் பருப்பு - 1 மேசைக்கரண்டி

செய்முறை

ஒரு வாணலியில் பருப்பைப் போட்டு கைபொறுக்கும் சூடு வரும்வரை வறுக்கவும். சற்று ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடியாக்கி பின்னர் சல்லடையில் சலித்துக்கொள்ளவும்.

சர்க்கரையை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடியாக்கிப் பின்னர் சல்லடையில் சலித்துக்கொள்ளவும். இரண்டையும் நன்றாகக் கலந்துகொண்டு ஏலக்காய்ப் பொடியையும், வறுத்து ஒடித்த முந்திரிப் பருப்பையும் போட்டுக் கலக்கவும்.

நெய்யைச் சற்று இளம் சூடாக்கி இந்த மாவு, சர்க்கரை கலவையில் இட்டு சூட்டுடன் சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். "ம்ம்ம்...யம்மி" என்று நாக்கைச் சப்புக்கொட்டிச் சாப்பிடுவார்கள் எல்லோரும்!

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com