சாக்கலேட் பர்ஃபி
தேவையான பொருட்கள்

கண்டன்ஸ்ட் மில்க் (சர்க்கரை சேர்த்தது) - 1 டப்பா
கோகோ பவுடர் - 1/4 கிண்ணம்
வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
வறுத்து ஒடித்த
பாதாம், வால்நட், முந்திரி கலவை - 1/4 கிண்ணம்
சர்க்கரை - 1/2 கிண்ணம்

செய்முறை

அடி கனமான வாணலியில் கண்டன்ஸ்ட் மில்க்கை விட்டு நன்கு சூடு படுத்தவும். கோகோ பவுடர், வெண்ணையை அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சர்க்கரையையும் வறுத்து ஒடித்த பாதாம், வால்நட், முந்திரி கலவையயும் இதனுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.

15-20 நிமிடங்கள் கிளறிக்கொண்டு இருந்தால் இந்தக் கலவை வாணலியை விட்டு மேலே சற்று எழும்பி வரும்.

இந்தப் பதத்தில் இதை ஒரு நெய் தடவிய தட்டில் சமமாகக் கொட்டி ஆறிய பின்பு கத்தியால் துண்டங்கள் போடவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com