உலகத்திலேயே மிகநீண்ட கடற்கரையான மெரீனா கடற்கரையை அழகு செய்யத் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. கடற்கரையில் நன்கு அறியப்பட்ட சீரணி அரங்கம், நீச்சல் குளம் ஆகியவை இடிக்கப்பட்டன. ஒவ்வொன்றாக இடித்துத் தள்ளப்படுவது தினந்தோறும் செய்திகளாகப் பத்திரிகைகளில் வந்தவண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் 'பீச் டெக்-2000' என்ற நவீன இயந்திரத்தின் மூலம் சென்னை மெரீனா கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியை முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 29 அன்று தொடங்கி வைத்துள்ளார்.
36 லட்சம் மதிப்புள்ள இந்த இயந்திரம் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டுள்ளது. இதை இயக்குவதற்கான ஒப்பந்தம் ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மும்பை கடற்கரையிலும் இதே பணியைக் கடந்த 3 ஆண்டுகளாகச் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படிப்படியாக சென்னையிலுள்ள எல்லியர்ட்ஸ், சாந்தோம், பெசன்ட் நகர் கடற்கரைகளையும் இவ்வியந்திரம் மூலம் தூய்மைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரைகளின் தூய்மை இனி கண்ணைக் கவருமா?
கேடிஸ்ரீ |