ஹிந்திக்கு செல்கிறது 'காக்க காக்க'
'காக்க காக்க' ஓடுகிற ஓட்டத்தில் ரொம்பவும் சந்தோஷத்தில் இருக்கிறார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தாணு. தாணுவிற்கு மேலும் சந்தோஷங்களைத் தரக்கூடிய விஷயங்களாகவே இப்போது அதிகம் வந்துகொண்டிருக்கிறது.

இந்தியில் கவுதம் இயக்க, இந்திப் படத்தயாரிப்பாளரும், நடிகருமான ·பெரோஸ்கான் தயாரிக்கிறார். ·பெரோஸ்கான் மகன் பர்தீன்கான் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படம் இந்தித் திரைப்பட உலகில் என்ன விதமான எதிர்பார்ப்பை உருவாக்கும் என்றவுடன் படத்தின் இயக்குனர் கெளதம், ''பாலிவுட் படங்களில் போலீஸ் அதிகாரிகளைப் புகழ்ந்து சொன்ன படங்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். இந்தப் படம் அந்த ரகம் என்பதால் புது எதிர்பார்ப்பு இருக்கும். இந்தியில் இந்தப் படத்தை முடித்துவிட்டு, தெலுங்கிலும் எடுக்கப்போகிறோம்'' என்றார்.

'காக்க காக்க' ஹிந்தியில் இவர்களைக் காக்குமா?

கேடிஸ்ரீ

© TamilOnline.com