விஜய், அஜித், பிரசாந்த் என்ற கதாநாயகர்களை ஓசைப்படாமல் பின்னுக்குத்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய இளம் வரவுகளான தனுஷ், சிலம்பரசன், ரவி போன்றோர் என்றால் அது மிகையல்ல.
இந்தக் கதாநாயகர்களின் வரிசையில் இன்று முன்னணியில் வந்துக்கொண்டிருக்கிறார் தனுஷ். வரிசையாக இவர் நடித்த படங்கள் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற வேளையில் தயாரிப்பாளர்கள் அவரை நாடி வருவது அதிகரித்து வருகிறது. நிறைய வாய்ப்புகள் தன்னை நோக்கி வருவதைக் கண்டு, வருகின்ற எல்லா வாய்ப்புகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார். தனக்கேற்ற கதை இருந்தால்மட்டும் ஒத்துக்கொள்கிறார் மனிதர்.
தணிகைவேல் தயாரிப்பில் 'ராகவா' என்ற புதுப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் தனுஷ். இப்படத்தில் இவருக்கு இணையாக மம்தா என்ற புதுமுக நடிகை தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. கையில் கிட்டத்தட்ட அரைடஜன் படங்களை வைத்திருக்கிறார்.
"இதுவரை வந்த எல்லாப் படங்களுமே என் வயதிற்கேற்றவர்களின் குணங்களைப் பிரதிபலிக்கும் படங்களாகவே இருந்ததால் என்னால் இயல்பாக நடிக்க முடிந்தது'' என்று கூறுகிறார் தனுஷ்.
'திருடா திருடி' யில் மன்மதராசா பாடலுக்கு அருமையாக நடனம் ஆடியிருக்கிறார். அதுமட்டுமல்ல மிகவேகமாகவும் சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறார்...
இவரது வெற்றிகள் தொடருமா?
கேடிஸ்ரீ |