கார்ன் ஃப்ளேக்ஸ் மிக்ஸ்சர்
தேவையான பொருட்கள்

ஓமப்பொடி - 1 கிண்ணம்
காரா பூந்தி - 2 கிண்ணம்
பொரித்த அவல் - 2 கிண்ணம்
பொட்டுக் கடலை (பொரி கடலை) - 1/4 கிண்ணம்
வறுத்த வேர்க்கடலை - 1/2 கிண்ணம்
வறுத்த முந்திரிபருப்பு - 1/2 கிண்ணம்
வறுத்த மாகடேமியா (macadamia nuts) - 1/4 கிண்ணம்
வறுத்த கார்ன் ·ப்ளேக்ஸ் (plain cornflakes) - 1 கிண்ணம்
மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பொரித்த கறிவேப்பிலை - கொஞ்சம் கரம் மசாலாப் பொடி (தேவையென்றால்) - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிது அளவு

செய்முறை

மேற்கூறிய எல்லாப் பொருட்களயும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்து பின்னர் டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

குறிப்பு: அவலைக் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாகக் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். இந்திய நாட்டுக் கார்ன் ஃப்ளேக்ஸை (plain cornflakes) வாங்கிப் பொரிக்கவும். இது இந்தியன் கடைகளில் கிடைக்கும்.

(பின் குறிப்பு: மேற்கூறியவற்றில் ஒரு கிண்ணம் என்பதன் கொள்ளளவு 250cc. தேக்கரண்டி என்பது டீ ஸ்பூனையும், மேசைக்கரண்டி என்பது டேபிள் ஸ்பூனையும் குறிக்கும்)

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com