தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1/2 கிண்ணம் கடலை மாவு - 1 கிண்ணம் ஓமம் - 1 தேக்கரண்டி வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு பொரிப்பதற்கு தேவையான சமையல் எண்ணெய் (Corn oil) பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை
எல்லா பொருட்களையும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். ஐந்து நிமிடம் கழித்துத் தேன்குழல் அச்சில் ஓமப்பொடி வில்லையைப் போட்டு, பிசைந்த மாவைக் போட்டுக் காய்ந்த எண்ணெயில் பிழியவும். இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்த பின்னர் (வெந்தபின்னர் மேலே மிதக்க ஆரம்பித்துவிடும்) வடிய வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |