பருப்பு முறுக்கு
தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 2 கிண்ணம்
கடலை மாவு - 1/4 கிண்ணம்
பாசிப்பருப்பு மாவு - 1/4 கிண்ணம்
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
சீரகம் அல்லது எள் - 1 தேக்கரண்டி
பொரிப்பதற்குத் தேவையான சமையல் எண்ணெய் (Corn oil)

செய்முறை

கடலை மாவையும், பாசிப்பருப்பு மாவையும் தனித்தனியாக இளம் சூடாக ஆக்கி ஆறிய பின்பு எல்லா பொருட்களுடன் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மற்றபடி செய்முறை மேல் சொல்லியது போலத்தான். மிளகாய்ப்பொடிக்கு பதில் தேவையான பச்சைமிளகாயை நன்றாக அரைத்துக் கலந்தும் செய்யலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com