பொட்டுக்கடலை (பொரிகடலை) முறுக்கு
தேவையான பொருட்கள்
அரிசி - 2 கிண்ணம்
பொட்டுக்கடலை மாவு - 1/4 கிண்ணம்
நெய் - 1 தேக்கரண்டி
சீரகம் அல்லது எள் - 1 தேக்கரண்டி
பொரிப்பதற்குத் தேவையான சமையல் எண்ணெய் (Corn oil)
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை

எல்லாப் பொருட்களையும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். முறுக்கு கையால் சுற்றத் தெரிந்தவர்கள் ஒரு துணிமேல் சுற்றி, சற்று நேரம் உலரவிடவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டுக் காயவிடவும். முறுக்குகளை ஒவ்வொன்றாக (மிதமான தீயில்) எண்ணெயில் போட்டு இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்த பின்னர் எடுத்து வடியவைக்கவும். முறுக்கு வெந்தபின்னர் மேலே மிதக்க ஆரம்பித்துவிடும்.

முறுக்கு அச்சில் மாவை சிறிது அளவு போட்டுக் காய்ந்த எண்ணெயில் பிழிந்தும் முறுக்குகளைச் செய்யலாம். வெண்ணெய் தரக்கூடிய மிருதுத் தன்மையை பொட்டுக் கடலை மாவு கொடுக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com