மைசூர்ப்பாகு
தேவையான பொருட்கள்

கடலை மாவு - 1 கிண்ணம்
சர்க்கரை - 1 3/4 கிண்ணம்
நெய் - 2 கிண்ணம்

செய்முறை

கடலை மாவை நன்கு சலிக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க விடவும். தளதள என 5 நிமிடங்கள் கொதிக்கட்டும். கொதிக்கும் சர்க்கரைப்பாகில் சிறிது சிறிதாக கடலை மாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். நெய்யை இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிது சிறிதாக விட்டவாறே கிளறவும்.

இவையாவும் ஒன்றாகச் சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சற்று பொங்கி மேலே எழுந்து வரும்போது ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டில் கொட்டிய மைசூர்ப்பாகை கரண்யால் சமப்படுத்தக் கூடாது. சற்று ஆறியபின்பு வில்லைகள் போடவும். அதிகம் ஆறவிட்டால் வில்லைகள் போடுவது சிரமமாக இருக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com