தேவையான பொருட்கள்
கொழுப்புச் சத்துள்ள பால் (whole milk) - 4 கிண்ணம் சர்க்கரை - 1 கிண்ணம் நெய்யில் வறுத்து ஒடித்த முந்திரி பருப்பு - 1/8 கிண்ணம் ஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை
அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பின்பு அடுப்பை நிதானமாக எரியவிடவும். மேலாக பாலின் ஏடு வரும்.
இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து போடவும். இவ்வாறு தொடர்ந்து செய்யவும். மீதமுள்ள பால் கெட்டியாக ஆகி, கரண்டியால் விடவரும் பதத்தில் வந்தபின்பு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை சேர்த்ததும் பால் சற்று தளர்ந்து விடும். சிறிது கிளறினால் கெட்டியாகிவிடும்.
பிறகு எடுத்து வைத்துள்ள பாலேட்டையெல்லாம் இந்தப் பாலில் சேர்க்கவும். ஏடு உடைந்து விடாமல் லேசாகக் கிளறவும். அடுப்பில் இருந்து இறக்கி, முந்திரி பருப்பு, ஏலக்காய்ப் பொடி சேர்த்து லேசாகக் கலக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |