பளிங்குக் கல்லில் ராஜீவ்காந்தி
கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்கு நினைவிடம் ஒன்று அமைக்கப்பட்டு, ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

நினைவகப் பணிக்கு என்று ஒதுக்கப்பட்ட மொத்தம் 12 ஏக்கர் நிலத்தில் முதல்கட்டமாக 7 ஏக்கரில் ரூ. 20 கோடி செலவில் நினைவக வாளகம் முடிவடைந்துள்ளது.

இங்கு ராஜீவ்காந்தியின் பண்புகளை குறிக்கும் வகையில் 7 நினைவுத்தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதுமட்டுமல்ல நமது நாட்டை வளம் பெறச் செய்யும் நதிகளான கங்கை, யமுனை, காவிரி, கோதாவரி, பிரம்மபுத்திரா, நர்மதை ஆகியவற்றின் பெயரையும் இத்தூண்கள் தாங்கியுள்ளன.

ராஜீவ்காந்தி உயிர்நீத்த இடத்தில் நினைவு மேடையுடன் பளிங்கு கல்லில் அவரது உருவம் செதுக்கப்பட்டு செங்குத்தான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. அஞ்சலி செலுத்த வருபவர்கள் நினைவிடத்தைச் சுற்றி வரும் வகையில் சுற்றுப்பாதை போடப்பட்டுள்ளன.

கேடிஸ்ரீ

© TamilOnline.com