சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் இருப்பவர்கள் "இங்குவிலைவாசி மிகவும் அதிகம்" என்று ஒரு பக்கம் கூறிக் கொண்டிருந்தாலும் இந்த ஊரை விட்டுக் கிளம்ப மட்டும் மிகவும் தயக்கம் காட்டுவர். அதே போல வேறு மாநிலங்களில் இருந்துவந்தவரும் சரி, இந்தியாவில் இருந்து வரும் பெற்றோர்களும் சரி, எப்பொழுதும் தன் ஊருக்குச் சென்று விரிகுடாப் பகுதி புகழ் பாடிக்கொண்டுதான் இருப்பர். அப்படி அவர்களை ஈர்த்த விஷயம் என்ன? சிலரைச் சந்தித்துக் கேட்ட பொழுது:
"மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் எனக்கு பல இன, மத, மொழி மக்கள் கூடப் பழகற அரிய வாய்ப்ப்பு வேற எந்த ஸ்டேட்டையும் விட இங்கேதான் அதிகம் கிடைக்கிறது."
ப்ரமோத் பெர்கலி
*****
"ஒரு வாரத்தில் எத்தனை தமிழ் கலை நிகழ்ச்சிகள், எத்தனை தமிழ் ரேடியோ நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கு எத்தனை தமிழ் பள்ளிகள், எங்கு போனாலும் எத்தனை தமிழ் முகங்கள்! இது ஒரு மினி தமிழ் நாடு தான்."
சுசித்ரா கனெக்டிகட்
*****
"எத்தனை முறை lay off ஆனாலும் மறுபடியும் ஒரு வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை தரக்கூடிய ஒரே இடம் விரிகுடாப் பகுதிதான்"
K.N. வைத்யா - ஆர்டன்வுட்
*****
"ஒரு பக்கம் மலை, ஒரு பக்கம் கடல், இது போதாதுன்னு திருப்பதிக்குப் போய் வந்த மன அமைதி லிவர்மோர் கோயிலுக்குப் போயிட்டு வரும்பொழுது கிடைச்சுடுதே...வேற என்ன வேணும் எங்களைப் போன்றவங்களுக்கு?"
பூமா - சென்னைவாசி
*****
"தெரு முனை டீக்கடையும், பூக்கடையும், வெற்றிலை பாக்குக் கடையும் தவிர நம்மூரில் இருக்கும் அத்தனையும் Bay Areaவில் மட்டும்தான் கிடைக்குதுன்னு நினைக்கிறேன்."
S.N. கிருஷ்ணன், சான் ஹோசே
*****
"சென்னை சரவண பவனிலிருந்து காரைக்குடி உணவு வரை அரை மணிக் குள் கிடைக்கக் கூடிய ஒரே இடம் இந்த Bay Areaவாகத் தான் இருக்க முடியும்."
செந்தில், ப்ரீமோண்ட்
*****
"பாஸ்டன் வெயிலிலும், குளிரிலும் அவஸ்தைப்படும் எங்களுக்கு, விரிகுடாவின் க்ளைமேட் ஒரு வரப்பிரசாதம் தான்."
சுந்தர், பாஸ்டனிலிருந்து வந்திருந்தவர்.
கருத்துச் சேகரிப்பு, புகைப்படங்கள்: லதா ஸ்ரீனிவாசன் |