குறுக்காக
1. கள்ளி வடநாட்டில் சாப்பிடுவது (5) 4. வெளியில் இழுத்து வடிவம் பாதி விலை (3) 6. கூனியுடன் சிறுத்து வரும் (3) 7. பார்த்திராச் சுண்டல் உள்ளிருப்பதுடன் கறியா? (5) 8. தம்முடன் புழு சேரப் பெற்ற வடு (4) 9. அரை விலங்கு வதை (4) 12. மகள் வீட்டைவிட்டு வெளியேறக் காரணமானவர் (5) 14. மாரி வரும்போது தோரணமாகும் மரம் (3) 16. மாலை வசீகரித்த மாலை (3) 17. புல்லுக்குள் வலு மாற்ற ஒப்பாரி (5)
நெடுக்காக
1. கடற்கரையில் சின்ன வீடு (3) 2. மீதி பயம் தலை வெடிக்க அதிர்ஷ்டம் (5) 3. வாரந்தோறும் வரும் மாதம் (4) 4.& 11. தொண்டரையும் மத்யான நேரத்தில் அசத்துவது (3, 4) 5. முளைக்காத மொட்டு தொடங்காமல் ஆட்டம் (5) 8. கொடுக்க கௌரவ விருது கடைசியாக உயர்ந்தது (5) 10. மனோவுக்கு இணையாக பறக்கிறதே! (2,3) 11. (4. நெடு. காண்க) (4) 13. கூம்பிச் சிரிக்கும்போது உள்ளே மலர்வது (3) 15. நுழைவது குறித்துச் சொல் (3)
வாஞ்சிநாதன் vanchinathan@vsnl.net
குறுக்காக: 1. சப்பாத்தி 4. உருவி 6. குறுகி 7. கண்டறியா 8. தழும்பு 9. மாவாட்டு 12. மாப்பிள்ளை 14. வேம்பு 16. துளசி 17. புலம்பல் நெடுக்காக: 1. சங்கு 2. பாக்கியம் 3. திங்கள் 4. உண்ட 5. விளையாட்டு 8. தரமானது 10. வாயு வேகம் 11. களைப்பு 13. பிச்சி 15. புகல் |