கிரிக்கெட் ஃபார் இந்தியா '06
இந்திய முன்னேற்ற குழுவும் சத்யம் அட்லாண்டா கிரிக்கெட் கிளப்பும் இணைந்து வழங்கும் கிரிக்கெட் ஃபார் இந்தியா '06 A.I.D. அட்லாண்டாவின் ஐந்தாம் ஆண்டு ஃபண்டு-ரெய்சர் இந்த ஆண்டு நவம்பர் 4, 11 தேதிகள் ஒவ்வொரு அமெரிக்க-வாழ் இந்திய கிரிக்கெட் விசிறிக்கும் உற்சாகமான, முக்கியமான நாள். இந்த கோலாகலத்தில் பங்கேற்க வேண்டுமானால் ஜார்ஜியா டெக்கின் CRC மைதானத்திற்கு வாருங்கள்!

A.I.D. ஒரு மிகப்பெரிய தொண்டு நிறுவனம். இந்த கிரிக்கெட் விழா A.I.D.ன் அட்லாண்டா கிளையின் பிரம்மாண்டமான நிதி திரட்டும் சேவை. மேலும் விவரங்களுக்கு www.aidindia. org/atlanta எனும் வலைதளத்தை பாருங்கள்.

சென்ற வருடம் "கிரிக்கெட் ஃபார் இந்தியா '05"-ல் 13 டீம்கள் பங்கேற்று மாபெரும் வெற்றியடைந்தது. பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பவர்களின் மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. அட்லாண்டாவின் பல ஹோட்டல் களும் இதில் தாராளமாக அன்னதானம் செய்தார்கள்.

இந்த வருடத்திய கிரிக்கெட் போட்டி இரண்டு நாளும் காலை 8:30 மணிக்கு தொடங்கி, இறுதி விளையாட்டு நவம்பர் 11ம் தேதி மாலை 3:00 மணிக்கு நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சத்யம் அட்லாண்டா கிரிக்கட் கிளப்பின் திரு. நந்துவைத் என்பவரும் அவரது உதவியாளர்களும் அம்பையர், ஸ்கோரர் என புள்ளி விவரங்களை கவனித்துக் கொள்வார்கள். மற்ற விவரங்களை A.I.D. நிறுவன உதவியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். சிற்றுண்டிகள் விற்பனைக்கு கிடைக்கும்.

கிரிக்கெட் ஃபார் இந்தியா '05-ன் வெற்றியடைந்த அணி: ப்ளூ பாந்தர்ஸ் இந்த போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதி AID-அட்லாண்டாவின் பல சமூக சேவை களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு http://www.aidindia.org/atlanta/projects.shtml வலைதளத்தை பார்க்கவும்.

AID-அட்லாண்டா நிறுவனம் பல சேவைகளை தொடர்ந்து வெற்றிகரமாக செய்தாலும், மேலும் முன்னேற்றம் அடைய உங்கள் பொன்னான நேரம் மற்றும் பணமாகவும் உதவி செய்து, இந்தியாவில் உள்ள பல கோடி மக்களுக்கு அடிப்படை தேவைகளும், நியாயமும், சமூக சீர்பாடும் கிடைக்க வேண்டுகிறோம்.

திரு. ஸ்ரீநி என்பவரை 678-467-2654 என்ற எண்ணில் அல்லது atlanta@aidindia.org என்ற email முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

http://atlanta.aidindia.org/cricket/ வலைதளத்தில் இந்த விழா பற்றி மேலும் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

உஷா கோபி

© TamilOnline.com