அக்கி (அரிசி) ரொட்டி
தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 3 கிண்ணம்
தேங்காய் (துருவியது) - 1 கிண்ணம்
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி - 1 கிண்ணம் எல்லாம் சேர்த்து பொடிப் பொடியாக நறுக்கியது
தயிர் - 1/2 கிண்ணம்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை

செய்முறை

முதலில் மிகப்பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, தயிர், உப்பு, பெருங்காயம் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு ஒன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

காரட் இருந்தால் துருவிப் போடலாம்.

எலுமிச்சையளவு மாவை எடுத்துத் தட்ட வேண்டும்.

பிறகு அதை எண்ணெய் தடவிய வாணலியில் போட்டு நன்றாக வேக வைக்கவும். தோசைக்கு விடுவது போல் சுற்றிலும் எண்ணெய் விடவும்.

நன்றாக வெந்தவுடன் எடுத்துவிடவும். திருப்பிப் போட வேண்டிய அவசியம் இல்லை.

இதை சாம்பார், ராஜ்மா, சன்னா மசாலா இவற்றில் ஒன்றோடு சேர்த்துச் சாப்பிடலாம்.

கொலஸ்ட்ரால் பயம் இல்லாதவர்கள் வெண்ணெய் தொட்டுக் கொள்ளலாம்.

இது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் ஐட்டம்.

K. ராஜலட்சுமி

© TamilOnline.com