தேவையான பொருட்கள்
கலந்த காய்கறிகள் - 4 கிண்ணம் (உருளைக்கிழங்கு, காரட், காலி·ப்ளவர், பீன்ஸ், பச்சை பட்டாணி) வெங்காயம் - 2 எண்ணெய் - 4 மேசைக்கரண்டி ஏலக்காய் - 4 கிராம்பு - 4 பட்டை - 1 பச்சை மிளகாய் - 2 (பிளந்து கொள்ளவும்) இஞ்சி - 2 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி (ஒன்றிரண்டாக உடைத்து நசுக்கியது) தேங்காய்ப் பால் - 2 கிண்ணம் (சீன, இந்தியக் கடைகளில் சர்க்கரை சேர்க்காத தேங்காய்ப் பால் கிடைக்கும்) தண்ணீர் - 2 கிண்ணம் உப்பு - சுவைக்கேற்ப கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
அடி கனமான வாணலியில் எண்ணெயை மிதமாகச் சூடு செய்து ஏலக்காய், கிராம்பு, பட்டை இவற்றைப் போட்டு, சிறிது வறுத்து, பின் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத் துண்டுகள் இவற்றைச் சேர்த்து வதக்கவும். இவை வதங்கிய பின் பாத்திரத்தை மூடி, காய்கறிகள், கருவேப்பிலை, உப்பு, தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் (காய்கறிகள் வேகும்வரை) மிதமான சூட்டில் அவற்றைக் கொதிக்க விடவும்.
காய்கறிகள் வெந்தபின் மிளகு, தேங்காய்ப் பால் சேர்த்து மென்சூட்டில் (தேங்காய்ப் பால் திரியாதிருக்க) 1 நிமிடம் வைத்து எடுக்கவும்.
சுவையான மலையாள இஷ்ட்டு ரெடி. (சமையல் எண்ணெயில் எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தது)
உமா வேங்கடராமன் |