கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி சுதா, ரகுநாதன் தம்பதியரின் புதல்வி குமாரி சரண்யாவின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி, Thousand Oaks, Civic Arts Plazaவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குரு பத்மினி வாசன் தலைமை யேற்க, பாபு பரமேஸ்வரன் அவர்களின் இசைக்குழுவின் பக்கவாத்தியங்களுடன் இனிதே நடைபெற்றது.
அரங்கேற்றம் நடப்பதற்கு ஒருமாதத்திற்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றில் உடல்நலம் பாதிக்கப்பட்ட செல்வி சரண்யாவுக்கு, இந்த விபத்தின் முலம் உடலில் காயமும், வலியும் ஏற்பட்டது. இந்நிலையிலும் அவர் குரு பத்மினி வாசனின் இடைவிடாத பயிற்சி யினால், கடினமாக பயிற்சிகள் எடுத்துக் கொண்டார். இதன் விளைவால் அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடித்து எல்லோரையும் ஆனந்தத்தில் மூழ்க வைத்தார்.
புதிதாக வாசஸ்பதி ராகத்தில் மிஸ்ரஜாதி தாளத்தில் புனைந்த வர்ணத்தில் அவருடைய ஜதிகளும் அபநியங்களும் காண்போரை வியக்க வைத்தன. மற்ற பதங்களுக்கும் தில்லானவுக்கும் நவரசங்களையும் வெளிப்படுத்தி சிறப்பாக ஆடினார்.
பாபு பரமேஸ்வரன் பாட, வினோத் வயலின் வாசிக்க, ஸ்ரீ கிருஷ்ணகுமார் மிருதங்கம் வாசிக்க. மகாதேவன் புல்லாங்குழல் இசை இவையெல்லம் ஒருங்கிணைந்து நடனத்தை மேலும் சிறப்பாக்கியது.
ரகுநாதனின் வரவேற்புரையும் வந்தன உரையும் ரசிகர்களை சந்தோஷப்பட வைத்தன.
ராமன் சக்கரவர்த்தி |