2007 மே 31ம் தேதி முதல் ஜூன் மாத இறுதிவரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்த மயி தேவி அவர்கள் சியாடல், சான் ·பிரான்சிஸ்கோ-வளைகுடா பகுதி, லாஸ் ஏஞ்சலஸ், நியூ மெக்சிகோ, டாலஸ் ஆகிய இடங்களுக்கு வருகை தந்திருந்தார். அன்பின் அடையாளமாக விளங்கும் அம்மா, தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து தமது அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீக சொற் பொழிவு, தியானம், பஜனைகள் மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மா வோடு கேள்வி-பதில், அம்மாவின் கையால் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.
அம்மாவின் அமுத மொழிகளில் சில:
'ஒரு போதும் கடந்தகாலம் திரும்பி வராது. எதிர்காலத்தைப் பற்றியும் நமக்குத் தெரியாது. அவற்றை நினைத்து நேரத்தையும், ஆரோக் கியத்தையும் இழக்காமல் நிகழ்காலத்தைப் பயனுள்ளதாக்க முயற்சி செய். மூன்று காலங்களையும் பற்றி அறிந்தவர் பரமாத்மா ஒருவரே. அதனால் நீங்கள் மூன்று காலங் களையும் இறைவனுக்கு சமர்பித்துவிட்டு, அவரை நினைத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல முயற்சி செய்யுங்கள். அப்படிச் செய்தால் சதா நம் முகத்தில் புன்னகை மறையாமல் இருக்கும்.'
'ஒரு வீழ்ச்சி ஏற்பட்டால், அதைத் திருத்தி மீண்டும் உற்சாகத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அந்த வீழ்ச்சி, மீண்டும் அதுபோல் ஏற்படாமல், அதிக கவனமாக இருப்பதற்காக ஏற்பட்டது என்று கருத வேண்டும். நடந்து முடிந்தவற்றைக் குறித்து வருந்துவதால் பயனில்லை. காயம்பட்ட இடத்தைப் பார்த்து அழுது கொண்டிருப்பதில் பொருளில்லை. அதற்கு மருந்து போடுவது தான் முக்கியம்.'
"ஒருவன் நம்மிடம் கோபப்படும் போது நாமும் திருப்பிக் கோபப்பட்டால், அவனை தண்டித்தால், அது அவனது கையிலுள்ள புண்ணுக்கு மருந்து போட்டு ஆற்றுவதற்கு பதில், அதைக் குத்தி மேலும் பெரிதாக்குவது போன்றது. அதன் பலனாக காயத்திலிருக்கும் சீழ் நம்மீதும் படுகிறது. நம் உடலிலும் துர்நாற்றம் பரவுகிறது. நமது கோபத்தால் அவன் மேலும் அகங்காரம் கொண்டவனாக மாறுகிறான். நாமோ அஞ்ஞானியாகின்றோம். மாறாக, நாம் பொறுமையாக இருந்தோ மானால், அது கையிலுள்ள காயத்துக்கு மருந்து வைத்து ஆற்றுவதற்கு சமமாகும்.'
அம்மா ஜூலை மாதம் வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
ஐயோவா 07.02 - 07.03
சிகாகோ 07.05 - 07.06
வாஸிங்டன் டி.சி. 07.08 - 07.09
நியுயார்க் 07.11 - 07.13
பாஸ்டன் 07.15 - 07.18
டொரன்டோ, கனடா 07.20 - 07.23
மேலும் விபரங்களுக்கு: www.amma.org (Amma photo copyrighted to M.A. Center, 2007)
சூப்பர் சுதாகர் |