தேவையான பொருட்கள்
காளான் - 1 கிண்ணம் உருளைக்கிழங்கு - 3 பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 பூண்டு - 4 பல் மசாலாப் பொடி - 1 தேக்கரண்டி கொத்துமல்லிப் பொடி - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - கொஞ்சம்
செய்முறை
காளானைத் துண்டுகளாகச் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். இவற்றை வாணலியில் போட்டு எண்ணெய் விட்டு வதக்கவும். இத்துடன் பூண்டு, மசாலாப்பொடி, கொத்துமல்லிப்பொடி உப்பு போட்டு சுருள வதக்கவும். உருளைக் கிழங்கைத் தோல்சீவி அதனுள் ஒரு துளை போட்டு காளான் கலவையை இட்டு நிரப்பி, வாணலியில் எண்ணெய் நிறைய விட்டு கிழங்கைப் போட்டு மேலே இடைவெளி இல்லாமல் ஒரு கனமான தட்டு நிறைய நீர்விட்டு மூடி வேகவிடவும். அவ்வப்போது திறந்து புரட்டி விட்டு மீண்டும் மூடி, கிழங்கு பொன்னிறமாகும் வரை வதக்கி எடுக்கவும். இது ருசியான தம் ஆலு.
தங்கம் ராமசாமி |