தேவையான பொருட்கள்
காளான் (நறுக்கியது) - 1 கிண்ணம் ரொட்டி - 5 துண்டு சீஸ் (துருவியது) - 2 மேசைக்கரண்டி தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி வெண்ணெய் - 2 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி பூண்டு - 5 பல் உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
காளான் துண்டுகள், பூண்டு, உப்பு, மிளகுத்தூள் இவற்றை வாணலியில் எண்ணெய்விட்டு நன்றாக வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தக்காளி சாஸ், சீஸ் போட்டு லேசாகப் புரட்டி எடுக்கவும்.
ரொட்டியில் வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து, தயாராக செய்து வைத்துள்ள காளான் கலவையை அதில் வைத்துச் சாப்பிடுங்கள்.
தங்கம் ராமசாமி |