மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் 2006 தமிழ்தேனீ போட்டி முடிவுகள்
மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் 2006ம் ஆண்டிற்கான தமிழ்த்தேனீ போட்டிகள் அக்டோபர் 14ம் தேதி செயின்ட் லூயிஸிலுள்ள டேனியல் பூன் நூலகத்தில் நடைபெற்றது.

எழுத்து, சொல், ஆத்திச்சூடி, திருக்குறள், கதை சொல்லுதல், பேச்சு, தமிழ்நாடு - இந்தியா வினாடி - வினா ஆகிய போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் அனைவரும் பாடப்பகுதிகளை மிகவும் ஆர்வத்துடன் நன்று கற்று வந்ததால் கடும்போட்டி நிலவியது. யார் சிறந்தவரென தீர்மானிப்பதில் நடுவர்களின் பாடுதான் திண்டாட்டமாய்ப்போனது.

திரு. கோபிநாதன், திரு. கனிக்கண்ணன், திருமதி. ஜெயலட்சுமி, திரு. ஆழகேந்திரன், திரு. ராஜீ, திரு. திருப்பதி ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறப்புடன் பணியாற்றினர். மிசெளரி தமிழ்பள்ளி ஆசிரியர்களும் மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகளும் போட்டிக்கான ஏற்பாடுகளை செவ்வனே செய்திருந்தனர். ஆத்திச்சூடி, திருக்குறள், தமிழகம் மற்றும் இந்தியா பற்றிய சிறப்புகளை குழந்தைகள் கற்றுக்கொண்டதில் பெற்றோர் பெருமகிழ்ச்சியடைந்தனர். தேர்வுமுறையை விடவும் போட்டி முறை தமிழ் கற்கின்ற ஆர்வத்தை அதிகரித்துள்ளது புலனாகியது.

பரிசு பெற்ற தேனீக்கள்: 1. அக்ஷய் சீனிவாசன், 2. அனிஷா மணிவண்ணன், 3. காவ்யா அழகேந்திரன், 4. கவுதம் ராமனாதன், 5. ப்ரதி பிச்சையா, 6. ஆர்த்தி பாலா, 7. அமுதயாழினி பொற்செழியன், 8. இலட்சுமி கனிக்கண்ணன், 9. மதுமிதா பிரபாகரன், 10. சஞ்சய் செருபல்லா, 11. வைசாலி இளங்கோ, 12. அபிநயா மணிவண்ணன், 13. நிவேதா மதியழகன், 14. சுவாதி ஐயனார், 15. விக்ரம் பொன்னுசாமி

மேலும் பங்குகொண்ட தேனீக்கள்: 1. பாலாஜி செருபல்லா, 2. துவாரக் நயன், 3. நம்பி பொற்செழியன், 4. சர்வேஷ் ஞானசிவம், 5. வாசு கணேஷ், 6. தாரிணி சுரேஷ், 7. மேக்னா சம்பத்குமார், 8. அரவிந்த் ஆறுமுகம், 9. ப்ரீதி உமாசங்கர், 10. பூர்ணஸ்ரீ மலர்வண்ணன், 11. அனுஷா செருபல்லா

வினாடி வினாவை Jeopardy வடிலில் அமைத்துப் புதுமையாக நடத்தினார் செல்வி. சிநேகா பகவன்தாஸ்.

மொத்ததில் தமிழ்ச்சிறார்கள் தமிழ்த் தேனீக்களாக மாறி "இன்பத்தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்" என்ற பாவேந்தரின் வரிகளை மெய்ப்பித்தனர்.

© TamilOnline.com