நந்தலாலா மிஷனின் நியூ ஜெர்ஸிக் கிளையின் ஆதரவில் முதன்முறையாக பாலாதேவி சந்திரசேகர் அவர்களின் மாணவர்கள் பங்குபெற்ற நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது பிரிட்ஜ் வாட்டர் கோவில் அரங்கத்தில் நவம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இறைவாழ்த்துடனும் அம்பாள் துதியுடனும் தொடங்கியது நிகழ்ச்சி. லலிதா அவர்கள் இயற்றி, கேதார கௌளையில் அமைந்த இத் துதிக்கு பாலாதேவி நடனம் அமைத்திருந்தார். அடுத்து விநாயகர், முருகன் மற்றும் நடராஜர் மேலான விறுவிறுப்பான கரணங்களை மூவர் வழங்கினர். 'பலுகே பங்கார மாயினா'வும், கானடாவில் அமைந்த தில்லானாவும் நிகழ்ச்சிக்கு மகுடமாய் அமைந்தன.
நிகழ்ச்சிக்கு டாக்டர் யக்ஞசுப்பிரமணியன், தலைவர், சிருங்கேரி வித்யா பாரதி நிறுவனம் (USA), அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நந்தலாலா மிஷன் |