ஃபவுண்டேஷன் ஃபார் எக்ஸலன்ஸ் (FFE) அமைப்புக்கு நிதி திரட்டும் வகையிலும், தங்கள் இயக்கத்தின் கல்விப் பொருளுதவிப் பணி பலருக்கும் எட்டும் வகையிலும் ஒரு இசை நிகழ்ச்சியை வழங்க இருக்கிறது. டிசம்பர் மாதம் 6ம் தேதி மதியம் ஆரம்பித்து இந்த நிகழ்ச்சி இரண்டு பகுதிகளாக வழங்கப்படும். இது சான் ஹோசேவில் வைன் தெருவில் உள்ள CET அரங்கில் நடக்கவிருக்கிறது.
நிகழ்ச்சி விவரம்:
மதியம் 2.30 மணிக்கு இராஜா சிவமணி அவர்கள் வீணை இசை வழங்க, நாராயணன் அவர்கள் மிருதங்கமும், மகாதேவன் அவர்கள் மோர்சிங்கும் உடன் வாசிக்கின்றனர்.
மாலை 6.00 மணிக்கு லலித கான வித்யாலயாவின் ஆசிரியர் லதா ஸ்ரீராம் அவர்கள் தன் மாணவ, மாணவிகளுடன் இணைந்து 'சிறந்த இசை அமைப்பாளர்கள்' என்ற தலைப்பில் பல இசை மேதைகளின் பாடல்களை வழங்குகிறார்கள்.
கலைஞர்கள் அனைவரும் தங்கள் நேரத்தையும், திறமையையும் கல்விக்காக நிதி திரட்டும் இந்த நிகழ்ச்சிக்குத் தானம் செய்கிறார்கள்.
FFE பற்றி:
FFE என்ற இந்தக் குழு இந்தியாவில் ஏழ்மை நிலையிலிருக்கும் படிப்பிற்சிறந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கி அவர்கள் வாழ்வை மேம்படுத்துகிறது.
இதுவரையில் சுமார் 6000 மாணவர் களுக்கு, 2.1 மில்லியன் பெருமானமுள்ள 11,500 உதவித் தொகைகளை வழங்கியிருக்கிறது. 40 சதவிகித உதவித் தொகைகள் தமிழ் நாட்டிலும், 30 சதவிகித உதவித் தொகைகள் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் வழங்கப் பட்டிருக்கிறது. 40 சதவிகிதம் பெண்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது.
கல்வி உதவித் தொகையானது, உயர்நிலைப் பள்ளியில் $120 முதல், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பிற்கு $500 வரையில் வழங்கப்படுகிறது. http://www.ffe.org என்ற வலைத்தளத்தில் மேலும் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் காசோலை அல்லது கிரடிட் கார்ட் மூலம் வழங்கலாம். http://www.ffe.org என்ற வலைத்தளத்தின் மூலமாகவோ அல்லது நிகழ்ச்சியில் நேர் முகமாகவோ வழங்குவது வரவேற்கப்படுகிறது.
நுழைவுச் சீட்டு:
$10 நுழைவுச் சீட்டுக்கள் அரங்கத்திலோ FFE அலுவலகத்திலோ பெறலாம். தொலைபேசி எண் 408 985 2001. www.sulekha.com என்ற வலைத்தளத்திலும் கிடைக்கும்.
அனைவரும் வந்திருந்து இசையை இரசிப்பதுடன் ஒரு சிறந்த பணிக்கு உதவுங்களேன்.
தகவல்: சுரேஷ் சேஷன் தமிழில்: பாகீரதி சேஷப்பன் |