நியூ ஜெர்ஸியை சேர்ந்த CMANA, அமெரிக்கா வாழ் இசை கலைஞர்களையும், இசை உலகில் சிறந்து விளங்கும் மற்ற கலைஞர்களையும் சிறப்பான முறையில் ஆதரித்து வந்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் (அக்டோபர் மாதம்) CMANA வயலின் வித்தகர் பத்மபூஷன் திரு.டி.என்.கிருஷ்ணனின் வயலின் இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தது. வயலினின் இசைக்கு ஏற்ற பக்கவாத்திய இசையை தனது மிருதங்க வாசிப்பின் மூலம் வழங்கினார் அமெரிக்கா வாழ் ரோஹன் கிருஷ்ணமூர்த்தி. திரு.கிருஷ்ணன் தனது கச்சேரியை ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த வாதாபி கணபதியோடு தொடங்கினார். ஜகன்மோஹினி ராகத்தில் அமைந்த எவரணியும், மோகனத்தில் அமைந்த நன்னு பாலிம்பாவையும் அவர் கையாண்ட விதம் அதி அற்புதமாக இருந்தது. ரோஹன் மிஸ்ட நடையிலும், மிஸ்ர நடை கோர்வையிலும் நடத்திய தனி ஆவர்த்தனம் ரசிகர்களிடம் பலத்த பாராட்டை பெற்றது. ஒரு அருமையான இசைக்கச்சேரியை ஏற்பாடு செய்த CMANAவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மேலும், இதைப் போலவே நல்ல நிகழ்ச்சிகளை CMANA வழங்கும் என்ற நம்பிக்கையுடன்,
ராதா ஐய்யர், நியூஜெர்ஸி |