பத்திரிக்கை சுதந்திரத்திற்கு விழுந்த அடி?
நவம்பர் 7ம் தேதி சட்டப்பேரவையில் சபாநாயகர் காளிமுத்து கொண்டு வந்த ஓர் உரிமைப் பிரச்சினைதான் புயலுக்கு காரணம். பிரபல ஆங்கில நாளேடான 'தி ஹிந்து' மற்றும் தமிழ் நாளேடான 'முரசொலி' ஆகிய இரண்டின் ஆசிரியர்கள் மற்றும் நிருபர்கள் ஆறு பேருக்கு 15 நாள் சாதாரண சிறைத்தண்டனை விதித்து பேரவைத் தலைவர் காளிமுத்து தீர்ப்பளித்தார்.

ஜனநாயகத்தில் பத்திரிகைகள் சுதந்திரம் என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய முக்கிய உரிமையாகும். ஒரு செய்தியை வெளியிடுவதற்கும், விமர்சனம் செய்வதற்கும் பத்திரிகைகளுக்க முழுச் சுதந்திரம் உள்ளது. எனவே, இந்த நடவடிக்கையைக் கண்டித்து இந்தியா முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்கள். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தண்டனையை விமரிசித்தன.

இந்நிலையில் ஹிந்துப் பத்திரிகை உச்ச நீதிமன்றத்தில் சட்டப்பேரவை தீர்ப்பை எதிர்த்துத் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பத்திரிகையாளர் களை கைது செய்ய தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் இடைக்காலத் தடை விதித்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com