மணிரத்தினத்தின் உதவியாளராக 'டும் டும் டும்', 'கன்னத்தில் முத்தமிட்டால்' படங்களில் பணியாற்றிய அனுபவமும், அமெரிக்காவில் கன்சாஸ் ஸ்டேட் யுனிவர்சிடியில் மாஸ் கம்யூனிகேஷன் துறையில் கற்ற அறிவையும் கொண்டு 'ஸ்நாப் ஷாட்' என்கிற ஆங்கிலப்படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார் ரூபா சுவாமிநாதன் என்கிற மும்பைத் தமிழர்.
எறக்குறைய 40 லட்சம் ரூபாய் செலவில் உலகச் சந்தையைக் குறிவைத்து, தேசியத் திரைப்பட வளர்ச்சிக் குழுமத்துக்காக (NFDC) உருவாக்கப்பட்டது இத்திரைப்படம்.
''கதைக் களமும், கதாபாத்திரங்களும் இந்தியாவுக்கானவை. உணர்வுகள் உலகம் முழுவதுக்கும் பொதுவானதுதான். ஐந்து பெண்கள், மூன்று ஆண்கள். இவர்களின் பத்துவருட சம்பவங்களில் தொகுப்புதான் 'ஸ்நாப் ஷாட்'. ஒவ்வொருவரின் வாழ்விலும் 20லிருந்து 30வயது வரையிலான இடைப்பட்ட காலத்தில்தான் காதல், கடமை, திருமணம் என எல்லா விஷயங்களிலும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.
இந்த வயதில் உள்ளவர்களது உணர்ச்சியை வெவ்வேறு கோணங்களில் சொல்லும் படம் இது.'' என்கிறார் ரூபா.
தொகுப்பு: கேடிஸ்ரீ |