விஜயகாந்தின் 'அண்ணா'
விஜயகாந்த் ஆண்டாள் அழகர் சினி கம்பைன்ஸ் தயாரிப்பில் உருவாகிறது 'அண்ணா'. கதநாயகன், வேறு யார், விஜயகாந்த்தான்.

வருகிற பொங்கல் அன்று திரைக்குவரும் இப்படத்தில் இதுவரை விஜயகாந்த் நடித்திராத ஒரு புதிய பாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகி நமிதா என்ற புதுமுகம்.

படத்தின் ஒளிப்பதிவு ஆனந்த குட்டன். பழனிபாரதி, தாமரை, முத்துவிஜயன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்குத் தேவா இசையமைக்கிறார். மல்லியம்பட்டு மாதவன் கதை, திரைக்கதையை கவனித்துக்கொள்ள சித்திக் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com