இது ஏதோ புதுப் படத்தின் பெயர்னு நினைச்சுடாதீங்க. கமல்ஹாசனின் பிறந்த நாள்விழா போஸ்டரில் அவரை இப்படி வர்ணித்திருந்தாங்க. எப்படி?
'பரமக்குடியில் மலர்ந்த பாரிஜாதமே', 'இந்திய விருதுகள் மும்முறை முத்தமிட்ட இதயக் கமலமே', 'பொன்விழா நாயகனே' என்று விதவிதமான வாசகங்கள்.
சமீபத்தில் தன்னுடைய 49வது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார் நடிகர் கமல்ஹாசன். அவரது ஆழ்வார்பேட்டை வீட்டருகே சாலையின் இருபுறமும் அன்று காலை யிலிருந்தே அவரது ரசிகர்கள் ஏராளமாகத் திரண்டுவிட்டனர்.
வெகுநாட்களாகவே கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று விரும்பும் ரசிகமணிகள் வாழ்த்துக் கூறி அடித்திருந்த போஸ்டர்கள் கமல் அரசியலில் உள்நுழைந்துவிட்டாரோ என்கிற வகையில் இருந்தது.
''தமிழகத்தில் சமீபகாலமாகத் திரைப்பட உலகில் ஏற்பட்ட பல நிகழ்வுகள் நல்ல கலைஞர்களுக்கு அவமானம் தரக்கூடியதாகவே இருந்திருக்கிறது. இது நல்லதாகப்படவில்லை. எதிர்கால அவமானங்களுக்கும் இது சமிக்ஞை'' என்று அங்கு கூடியிருந்த நிருபர்களிடம் மிகவும் வருத்ததுடன் கூறினார்.
சண்டியர் படத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரின் கடும் எதிர்ப்பின் தாக்கமே மேற்கூறிய வார்த்தைகள்.
தற்போது அவர் தயாரித்துவரும் படத்தின் கதையை மாற்ற வேண்டும் என்று யாராவது கூறினால் கண்டிப்பாகப் போர் நடக்கும் என்கிறார். அதன் பெயரும் தீர்மானமாகி விட்டதாம். 'மீண்டும் சண்டியர்' இல்லையே!
தொகுப்பு: கேடிஸ்ரீ |