குறுக்காக
5. சித்திரை முதல் நாள் திருத்திய இடது புருவம் முழுதாக இல்லை (2, 4) 6. ஆறாக நாவால் அறியப்படுவது (2) 7. கமல் குழம்ப சூர்யா தலையிட விளைச்சல் (4) 9. அருணகிரியாரின் நூலைக் கொஞ்சம் புரட்டு (4) 10. ஒரு செய்யுள் இலக்கியம் மாலையில் தா (4) 12. இருட்டத் தொடங்கியவுடன் புயல் சுழலும் சுபாவம் (4) 13. முகத்தின் அழகைக் கெடுக்கும்படி குண்டாகு (2) 14. காட்டுவிலங்கு மாற்றிய திரிக்கு வெளியே படம்போடு (6)
நெடுக்காக
1. காட்டில் இட நெருக்கடி தோன்றும்படி மிரள்பவர் (2) 2. ருஷ்யத் தலைவருடன் வாசனை மரம் தூரத்தில் இல்லை (4) 3. மேற்கே போகும் நதியில் இறுதியாகக் குளிக்கும் கணவன்-மனைவி (4) 4. பசு தராதது, தயிரைத் தருவது! (6) 8. மனமிளகி, தீய்ந்து, உள்ளே கொட்டு (6) 11. அழகி திரும்ப ஓர வடிவம் திடமில்லை (4) 12. முடிவிலாச் செல்வத்தைத் தருபவளின் குறிக்கோள் (4) 15. ஊரைச் சுற்றிக் கயிறு செய் (2)
வாஞ்சிநாதன் vanchinathan@vsnl.net
விடைகள்:
குறுக்காக:5. புதுவருடம் 6.ருசி 7.மகசூல் 9. திருப்பு 10. அந்தாதி 12. இயல்பு 13. பரு 14. வரிக்குதிரை நெடுக்காக:1. சாது 2. அருகில் 3. தம்பதி 4. எருமைப்பால் 8. கசிந்துருகி 11. திரவம் 12. இலக்கு 15. திரி |