லயவிந்யாசம்
கடந்த நவம்பர் 19 அன்று மாலை San Jose மெக்சிகன் ஹெரிடேஜ் ப்ளாஸாவில், எவர்க்ரீன் பாலவிஹாரின் ஆறாவது ஆண்டு விழா நடைபெற்றது. அதில் இடம் பெற்ற Percussion Arts Center மாணவர்களின் 'லயவிந்யாஸம்' நிகழ்ச்சி மிகவும் புதுமையான முயற்சி எனலாம்.

வேத காலத்தில் இருந்தே "தாள வாத்தியங் களின் அரசன்" என்றழைக்கப்படும் மிருதங்கத்தின் மூலம் லயங்களின் பல நுணுக்கங்களையும், பல்வேறு தாள அமைப்பு களின் கோர்வைகளையும் கொண்டு 12 மாணவர்கள் ஒரே நேரத்தில் நம் செவி களுக்கு விருந்தளித்தனர். கர்னாடக இசையில் எட்டு அங்கங்களைக் கொண்டு ஆதி தாளம் என்றும், இந்துஸ்தானி இசையில் "தீன்தால்" என்றும் அழைக்கப்படும் தாள வகையில் சுமார் அரை மணி நேரம் தன் திறைமைகளை சேர்ந்து வெளிப்படுத்தியும், மேலும் சிலர் தனித்திறமையை வெளிப் படுத்தும் வண்ணம் கற்பனையுடன் கூடிய ஜதிகளை வாசித்தும் மெருகேற்றினர்.

பாரம்பரிய இசைக்கே உரித்தான சதுஸ்ர, திஸ்ர, மிஸ்ர நடைகளின் ப்ரயோகங்களை சரியான காலப்பிரமாணத்துடன் மிக துல்லிய மாக ஜதிகளை மடை திறந்த வெள்ளம் போல் சுமார் அரைமணி நேரம் மூச்சு விடாமல் கூறிய இவர்களின் குருவும், Percussion Arts Center-ன் நிறுவனருமான திரு.ரமேஷ் ஸ்ரீனிவாசன், தான் Maestro சங்கீத கலாநிதி திரு. வேலூர் ராமபத்ரன் அவர்களின் பிரதம சீடர் என்பதை நிரூபித்து விட்டார்.

லதா ஸ்ரீநிவாஸன்

© TamilOnline.com