நாம் முட்டையை பொடிமாஸ் (scrambled eggs) செய்வது போலவே டோஃபூவையும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
மென்மையான (silken soft) டோஃபூ - 1/4 கிண்ணம் சிவப்பு வெங்காயம் - 1/2 காரட் - 1/4 சிறிய தக்காளி - 1 பச்சைக் குடைமிளகாய் - 1/4 பச்சை மிளகாய் - 1 பச்சைக் கொத்துமல்லி - சிறிதளவு சமையல் எண்ணெய் - 1 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
செய்முறை
டோஃபூவைக் கையால் நன்றாக உதிர்த்து பொடியாக்கிக் கொள்ளவும். எல்லாக் காய்கறிகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாயகன்ற ஒட்டாத (non-stick pan) பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர் காரட், சிறிய தக்காளி, பச்சைக் குடைமிளகாய், உப்பு ஆகியவை போட்டு நன்றாக வெந்ததும் பொடியாக்கிய டோஃபூவைப் போட்டுக் கிளறவும்.
சிறிது நேரம் கிளறிக்கொண்டு இருந்தால் டோஃபூ நன்றாக கெட்டித்தன்மையை அடைந்து விடும். கீழே இறக்கி, நறுக்கிய பச்சைக் கொத்தமல்லித் தழையைத் தூவவும். சூடாக சாப்பிட மிகுந்த ருசியுடன் இருக்கும்.
பின்குறிப்பு
இதை ரொட்டித் துண்டங்களின் நடுவிலும் வைத்து சாப்பிடலாம்.
மென்மையான அல்லது கடினமான சோள சப்பாத்திகளின் (soft or hard taco) நடுவில் வைத்தும் சுருட்டி சாப்பிடலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |