அரங்கேற்றம்
ஸ்ரீ கலா மந்திரின் சுஜாதா ஸ்ரீனிவாசன் தன் மாணவி மதுரா ஜயா ஸ்ரீதரனின் அரங்கேற்றத்தை 2003 செப்டம்பர் 13ம் தேதி Tri-c Metro வளாகத்தில் நடத்தினார். 13 வயதான மதுரா இவரிடன் 6 வருடங்களாகப் பயின்றதில் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளார்.

மிகச் சுறுசுறுப் போடு ஆடிய மதுரா அபிநய பூர்வமான கிருதிகளுக்கும் நயமாகச் செய்தார். விநாயகர் துதியோடு தொடங்கி, அலாரிப்பு, கிருஷ்ணரின் மேல் 'சப்தம்' எனத் தொடர்ந்தது. நிகழ்ச்சியின் சிகரமாய் மீனாட்சியம்மை மீதான வர்ணம் அன்னையின் பெருமையைக் காட்டும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. மஹிஷனை அழிப்பதைச் சித்தரிக்கையில் மதுரா பார்ப்போரை வியக்க வைத்தார்.

கிருஷ்ணனின் பால்ய விளையாட்டு களைக் காட்டும் 'தாயே யசோதா', சிவன் மீது 'போ சம்போ', ராமனைப் போற்றும் 'நகுமோமு' ஆகியவையும் கண்ணுக்கு விருந்தாயின. விறுவிறுப்பான தில்லானா வைத் தொடர்ந்து நாட்டுப்புற நடனத்துடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இதன் வெற்றியில் பாடியவர், நட்டுவாங்கம் செய்தவர் மற்றும் பக்கவாத்தியம் வாசித்தவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. சுஜாதா தமது மாணவர் களுக்கு வைத்திருக்கும் உயர்ந்த தர நிர்ணயம் இந்நிகழ்ச்சியில் நன்கு வெளிப்பட்டது.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த டாக்டர் எஸ். யக்ஞசுப்பிரமணியன் (தலைவர், சிருங்கேரி வித்யாபாரதி அறக்கட்டளை), சிருங்கேரி மற்றும் காஞ்சி மடங்களின் சார்பில் தங்க மெடல்களைக் கொடுத்துக் கவுரவித்தார்.

© TamilOnline.com