குருசாமி எம்.என். நம்பியாரின் சபரிமலை பயணம்
இது சபரிமலை சீசன். வருடா வருடம் சபரிமலைக்கு லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து ஐயப்பனை தரிசித்து வருகிறார்கள். சினிமா நட்சத்திரங்களும் விதிவிலக்கல்ல.

திரைப்பட நட்சத்திரங்கள் எல்லோராலும் 'குருசாமி' என்று மரியாதையுடன் அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் எம்.என். நம்பியார் தன்னுடைய 84வது வயதில் 61வது முறையாக சபரிமலைக்கு புறப்பட்டார். இவருடன் பல சினிமா நட்சத்திரங்கள் மலைக்குச் சென்றனர். இந்தமுறை நம்பியாருடன் நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் லாரன்ஸ் டிசோசா, ராமநாதன், டி.என். சுந்தரம் ஆகியோர் இதில் உள்ளனர்.

இவர் மகன் சுகுமார் நம்பியார் 30வது முறையாகத் தந்தையோடு மலைக்குச் செல்வது குறிப்பிடத் தக்கது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com