அக்டோபர் 2006, அன்று நியூஜெர்சி தமிழ்ச் சங்கம் விழாக்கோலம் பூண்டது. தீபாவளி திருநாளை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி சிறுவர், சிறுமியர்கள் ஆடி, பாடி, நாடகம் நடத்தி அனைவரையும் மகிழ்வித் தார்கள். வீணை இசையாலும் வாத்திய கச்சேரி மூலமாகவும் அனைவரையும் தமிழகத்திற்கே அழைத்துச் சென்றார்கள். இவ்விழாவிற்கு மேலும் அரங்கேற்றியது திரு. ஐங்கரன், மற்றும் திருமதி அனிதா கிருஷ்ணன் அவர்களின் இன்னிசை விருந்து. நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்து விழாவை சிறப்பித்தார்கள்.
சங்கத்தின் தலைவர் திரு. முத்துக்குமார் அவர்கள், NJTS YOUTH FORUM என்ற அமைப்பை அறிமுகப்படுத்தினார். இதன் founder members ஆன, செல்வி மனோஜா மற்றும் செல்வன் வினீத் தங்கள் அமைப்பைப் பற்றி மக்களிடம் பேசினார்கள்.
நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சி பொங்கல் திருவிழா. இவ்விழா ஜனவரி 20, 2007 அன்று நடைபெறவுள்ளது. புகழ்பெற்ற நடன ஆசிரியர்கள் சேர்ந்து தமிழ் இலக்கிய பெருமையை செந்தமிழ் ரத்னங்களாக படைக்க உள்ளார்கள். மேலும் தை திருநாளன்று நமது நியூஜெர்சி புகழ் சுமித்ரா ராம்ஜி, நகைச்சவை நாடகம் மூலமாக மகிழ்விப்பார்கள். நமது njts.org/njts.info இணைய தளம் சென்று மேலும் பொங்கல் நிகழ்ச்சியைப் பற்றிய விவரங்களை அறியலாம்.
உஷா |