கமல்ஹாசன் நடித்து இயக்கும் 'சண்டியர்' படத்திற்கு 'விருமாண்டி' என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆடியோ கேசட் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
வழக்கமான சினிமாக்களில் இருந்து சற்று மாறுபட்டு உதிரிப்பூக்கள், 16 வயதினிலே, பிதாமகன் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. கமலஹாசனின் 'விருமாண்டி' இந்த வரிசையில் வரும் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
பொங்கலன்று திரைக்கு வருகிறார் 'விருமாண்டி'. வெள்ளை முண்டா பனியன், 4 முழ வேட்டி, நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டை, நடுவில் வெற்றித் திலகம், நீண்ட கிருதா மீசையுடன் விருமாண்டியாக இதில் காட்சி தருகிறார் கமல்ஹாசன்.
இப்படத்தில் ரோகிணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார். அவருக்கு ஏஞ்சலா காத்தமுத்து என்கிற பாத்திரம்.
"இனி இடர் இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்'' என்கிறார் கமல்.
கேடிஸ்ரீ |