தேவையான பொருட்கள்
கல்கண்டு - 1 1/2 கிண்ணம் அரிசி - 1 கிண்ணம் பால் - 2 கிண்ணம் ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி முந்திரிப் பருப்பு - 6 நெய் - 1 கிண்ணம்
செய்முறை
அரிசியை வாணலியில் நெய் ஊற்றிச் சிவக்க வறுத்து, பால், கொஞ்சம் தண்ணீர்விட்டு குக்கரில் குழைய வேகவிடவும்.
பிறகு எடுத்து ஒரு பாத்திரத்தில் கல்கண்டைப் போட்டுக் கரைய விட வேண்டும். கொதிக்க ஆரம்பித்தவுடன் வெந்த சாதத்தைப் போட்டுச் சேர்ந்து கொதிக்கவிடவும். நெய்யில் முந்திரி வறுத்துப் போட்டு, ஏலக்காய் பொடியைப் போடவும்.
பொங்கல் சேர்ந்து கொதித்ததும் இன்னும் கொஞ்சம் நெய்யை விட்டுப் பதமாக இறக்கிவிடவும். பச்சைக் கற்பூரம் சிறிது போடலாம். சூட்டோடு சாப்பிட்டால் சுவை சொக்கவைக்கும்.
தங்கம் ராமசுவாமி |