வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 26 ஆண்டு கால வழக்கத்தின் தொடர்ச்சியாக தைத் திங்களை வரவேற்கும் விதத்தில் தமிழர்களின் பெருவிழாவான பொங்கல் திருநாளை, மக்கள் பெரிதும் விரும்பும் புகழ் பெற்ற தமிழ்ச் சான்றோர்கள் தலைமையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறது. விழா சனவரி 13, 2007 சனிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில், கோம்ஸ் துவக்கப் பள்ளி (Gomes Elementary School), 555 லெமாஸ் லேன், ப்ரீமான்ட்-இல் நடைபெறும். விழாவில் தமிழ் மக்கள் பெரிதும் விரும்பி ரசிக்கும் பட்டி மன்றம், கவியரங்கம், தமிழிசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
சிறப்புப் பட்டி மன்றம்: "இன்றைய சூழலில் இல்லங்களில் தமிழில் பேசுவது: கடினமே! சுலபமே!!"
தலைவர்: திருமதி உமையாள் முத்து
சிறப்புக் கவியரங்கம்: "இலக்கியப் பெண்டிர்" தலைவர்: கவிஞர் மு. மேத்தா
தமிழிசை: தேவாரம் மற்றும் திருப்பாவை தமிழிசைப் பாடல்கள் வழங்குபவர்: திருமதி. பத்மா இராஜகோபால்
அனைவரும் வாருங்கள். விழாவில் கலந்து கொண்டு, நிகழ்ச்சிகளைக் கண்டு, மகிழ்ந்து, பாராட்டி, சிறப்பிக்கலாம். எல்லோரும் சேர்ந்து கொண்டாடி மகிழலாம்.
மேலும் விவரங்களுக்கு: வலைத்தளம்: www.bayareatamilmanram.org தில்லை குமரன்: 408.857.0181 / president@bayareatamilmanram.org
உஷா |