பொங்கல் வகைகள்
தை பிறக்கப் போகிறது. பொங்கல் நினைவு வருவதில் ஆச்சரிய மென்ன! இதோ சில பொங்கல் வகைகள்.

அவல் பொங்கல்

தேவையான பொருட்கள்

அவல் - 2 கிண்ணம்
பால் - 2 கிண்ணம்
பயத்தம் பருப்பு - 1 கிண்ணம்
மிளகு - 1 மேசைக் கரண்டி
சீரகம் - 1 மேசைக் கரண்டி
முந்திரி பருப்பு - 6
பெருங்காயம் - சிறிதளவு
நெய் - 1 கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
இஞ்சி, கருவேப்பிலை

செய்முறை

அவலை நன்றாகக் களைந்து பாலுடன் சேர்த்து வேகவிடவும்.

பயத்தம் பருப்பை வாணலியில் இலேசாக வறுத்து, குழைவாக வேக வைத்து அவலுடன் சேர்த்து உப்புச் சேர்க்கவும்.

மிளகு, சீரகம் உடைத்தோ அல்லது முழுதாகவோ நெய்யில் இட்டுப் பொரித்து இஞ்சி பெருங்காயம் பொரித்து போடவும். அதனுடன் கருவேப்பிலையைச் சேர்க்கவும்.

நன்றாக கொதித்து ஒன்று சேர்ந்து வந்ததும் இறக்கிவிடவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும்.

தங்கம் ராமசுவாமி

© TamilOnline.com