எம்.எஸ்.வி. வாழ்க்கை வரலாறு
திரைப்பட உலகில் கால் நூற்றாண்டுக் காலம் கொடிகட்டிப் பறந்த இசையமைப் பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் வாழ்க்கைச் சரித்திரம் 'மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.' என்கிற தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது.

புகழ்பெற்ற இந்திப்பட இசையமைப்பாளர் நவுஷத் புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியைத் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பெற்றுக்கொண்டார்.

எழுத்தாளர் ராணிமைந்தன் எழுதியுள்ள இப்புத்தகத்தில் எம்.எஸ்.வி. அவர்களைப் பற்றி இதுவரை தெரியாத பல அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய நவுஷத் ''என்னைத் தன் குரு என்று எம்.எஸ்.வி. கூறுகிறார். ஆனால் நான் அவரிடமிருந்து இசையில் பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டுள்ளேன். ஆகவே அவர்தான் என் குரு'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

நவுஷத் கிளம்பிச் செல்லும்வரை எம்.எஸ்.வி அமராமல் நிகழ்ச்சி முழுவதும் நின்றுகொண்டே இருந்தது நெகிழவைத்தது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com