வட கலிபோர்னியா தமிழ்ச்சங்கம் (TNC) கலைவிழா 2006
வடகலிபோர்னியா தமிழ்ச்சங்கம் இவ் வாண்டு கலைவிழாவை அக்டோ பர் மாதம் 7ஆம் தேதி கொண்டாட உள்ளார்கள். இது இவர்களது 13ம் வருட கலைவிழாவாகும். வடகலிபோர்னியா தமிழ்ச்சங்கம் தமிழ் கலை கலாச்சாரங்களை சித்தரிக்கும் நிகழ்ச்சிகளை வழங்குதல், தமிழ்மொழி, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றில் ஊக்கத்தை இங்குள்ள சிறுவர்களுக்கு ஏற்படுத்தி, தமிழ் மொழியில் நாட்டம் வரக்கூடிய நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளுதல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

இந்த தமிழ்ச்சங்கம், இலங்கையில் அவதியுறும் தமிழ்மக்களுக்கு உரிய நேரங்களில் நிவாரணம் வழங்குதல் போன்ற முயற்சிகளையும் செய்கிறார்கள்.

இவ்வாண்டு கலைவிழாவில் சிறுவர், சிறுமியர், பெரியோர்கள் பங்கு மற்றும் இயல், இசை, நாடகம், வில்லுப்பாட்டு போன்ற பலதரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன. கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இரவு உணவின் பின் வளைகுடா மெல்லிசைக் குழுவான 'ராகலயா' வழங்கும் தமிழ் திரையிசை, ஆடல் போன்ற நிகழ்ச்சி களும் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் டென்னஸியைச் சேர்ந்த ஐங்கரன் சிறப்புப் பாடகராக பங்குபெறுகிறார். இதில் சிறப்பு நிகழ்ச்சியாக N.Micry Shanky யும் கலந்து கொண்டு சபையோரை ஊக்குவிப்பார்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
www.tnc-usa.org, 510.796.3275

© TamilOnline.com