அம்மன் வேடத்தில் கே.ஆர்.விஜயா!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு புன்னகை அரசி கே.ஆர். விஜயா பக்தி வேடம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். 'அங்காளம்மா' என்ற பெயரிடப் பட்ட இப்படத்தில் கே.ஆர்.விஜயா அம்மன் வேடத்தில்
நடிக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசன் நடிப்பில் வெளிவந்த 'நான் குடித்துக் கொண்டே இருப்பேன்' என்ற படத்தை இயக்கிய வி.ஆர். புருஷோத்தமன் நீண்ட இடை

வேளைக்குப் பிறகு இப்படத்தை தயாரித்து அளிக்கிறார்.

படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய வற்றையும் புருஷோத்தமனே கவனித்துக் கொள்கிறார்.

அங்காளம்மனின் மகிமையை மெய்சிலிர்க்கும் வகையில் விளக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது 'அங்காளம்மா'

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com