வளர்ந்து வரும் உன்னாலே... உன்னாலே...
'வானத்தைப் போல', ரமணா' போன்ற வெற்றிப்படங்களைத் தயாரித்து வழங்கிய ஆஸ்கார் பிலிம்ஸ் தற்போது 'உன்னாலே... உன்னாலே' என்கிற புதிய படம் ஒன்றை தயாரிக்கவிருக்கிறது.

புதுமுகம் விநய் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். இந்தி திரைப்பட உலகில் புகழ்பெற்ற நாயகியான கஜோலின் சகோதரி தனிஷா இப்படத்தில் மற்றொரு நாயகியாக

நடிக்கவிருக்கிறார். முதலில் 'ஜுலை காற்றில்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் பெயர் சில காரணங்களால் தற்போது 'உன்னாலே.. உன்னாலே.. என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கான இசையை ஹாரிஸ் ஜெயராஜ் கவனிக்கிறார். படத்திற் கான வசனத்தை எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.

'12பி', 'உள்ளம் கேட்குமே' போன்ற படங்களின் ஒளிப்பதிவாளரும், இயக்குனரு மான ஜீவா இப்படத்தை இயக்குகிறார்.

வெவ்வேறு கருத்துக்களுக்கும், விருப்பங் களுக்கும் இடையே ஒரு ஆணும் பெண்ணும் எப்படி, ஒரே புள்ளியில் இணைகிறார்கள் என்பதை சொல்லும் படம் 'உன்னாலே உன்னாலே'.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com