சமூகத்தைப் புரட்டி போடவரும் அச்சமில்லை
சமூகத்தைப் புரட்டிப் போடும் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் ஹரிகுமார். 'அச்சமில்லை' என்று பெயரிடப்பட்ட இப்படத்தை சிவாலயா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரித்து வழங்கவிருக்கிறது.

ஹரிகுமார் தற்போது 'தூத்துக்குடி' என்கிற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'அச்சமில்லை' படத்தின் நாயகியாக இன்று தமிழ்திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகி ஒருவர் நடிக்கவிருக்கிறார். இவருடன் வர்ஷினி என்கிற புதுமுகமும் நடிக்கவிருக்கிறார்.

முதன்முதலாக இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்குநராக அறிமுகமாகிறார் செ.குமரப்பா. சமூகத்தைப் புரட்டிப் போடும் நெம்புகோலாகவும், சாயத் தொட்டியில் விழுந்த நரிகளை அடையாளம் காட்டும் அளவுகோலாகவும் இருப்பவன்தான் என் படத்தின் நாயகன் என்று கூறுகிறார் இயக்குநர் செ.குமரப்பா.

படத்திற்கான இசையை ஸ்ரீகாந்த் தேவா கவனிக்க, பாடல்களை ந.அண்ணாமலை எழுதுகிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com