"காலை எழுந்தவுடன் படிப்பு - பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு" என்று குழந்தைகளுக்காகப் பாடினான் பாரதி. பெரியோர்களாகிப் படிப்பை விடவில்லை, பாட்டை விட்டுவிட்டோம். இதை மீண்டு ஆக்கபூர்வமாக நினைவுறுத்த 'வாழும் கலை' (Art of Living) அமைப்பினர் உலக அமைதிக்கு இசை என்ற நிகழ்ச்சியை மார்ச் 7ம் தேதி அன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இணையத்தில் வரும் ஊரெங்கும் நடக்கும் அநியாய, அக்கிரமங்களைப் பற்றிய செய்திகளைப் படித்து பின்பு ஏற்படுகிறது சோர்வும், அவநம்பிக்கையும். 'உலகம் செல்கிறது உலகம்? இந்த அநியாயத்தைக் கேட்க யாரும் இல்லையா?' என்று தோன்றுகிறது. இதனால் செயலிழந்து விடுகிறோம்.
இச்சூழ்நிலையில் சராசரி மனிதனாகிய நாம் என்ன செய்துவிட முடியும் என்று கேட்டால், எதையும் செய்வதற்கு முன் நமக்குள் உற்சாகம் பொங்கவேண்டும். என்னால் இவ்வுலகில் நடைபெறும் தீமைகளை ஒழிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வளரவேண்டும். அந்த உற்சாகத்தைத் தினமும் நாம் உணர்வதற்கு நம்முள் ஒரு உத்வேகம் ஏற்பட்டு, பிறகு அதற்குள் அமைதி உண்டாகி, அந்த அமைதியில் மனம் திளைத்தால், அதை மற்றவர்க்கும் வெளியே அள்ளி வழங்க முடியும்.
அந்த ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்த மிக எளிமையான வழி இசை. இசை நம் மனதைக் கவர்ந்து உள்ளும் புறமும் அமைதியை நிலைநாட்டுகிறது. இசையில் நம்மை மறந்துவிட்டோம் என்றால் இசையின் ஆழத்தை நம்மால் உணரமுடியும்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதை உறுதியாக்கப் பன்னாட்டு இசையில், பன்மொழியில், வெவ்வேறு மதங்களிலிருந்து எல்லோரும் பாடும்படியாகப் பாடல்களை நம்முடன் பகிர்கிறார்கள். மனம் நெகிழ்ந்து சேர்ந்து பாடி, அமைதியை நிலைநாட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறவாதீர்கள்.
இடம்: Milpitas community center 457, E Calaveras Blrd, Milpitas, CA 95035. நாள்: மார்ச் 7, மாலை 5 - 7. நுழைவுக் கட்டணம் கிடையாது. விவரங்களுக்கு: artoflivingsfba.org |