தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கடைசியாக வெளியேறி, தி.மு.க.வின் தலைமையில் அமைந்துள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் முதலாகத் தங்களுக்கான தொகுதிகளைப் பெற்ற பா.ம.க.விற்கு ரஜினியின் ரசிகர்கள் பெரிய தலைவலி ஆகிவிட்டனர்.
ரஜினியின் 'பாபா' படத்தைத் திரையிட்ட பல திரையரங்குகளை அப்போது பா.ம.க. வினர் தாக்கினர். அது மட்டுமல்லாமல், டாக்டர் ராமதாஸ் ரஜினியைப் பற்றிக் கூறிய கருத்துக்களாலும் ரஜினியில் ரசிகர்கள் கொதிப்படைந்தனர்.
பா.ம.க.விற்குச் சரியான பதிலடி கொடுப்பதற்காகக் காத்திருந்த ரஜினி ரசிகர்கள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலே சரியான சமயமாகக் கருதிச் செயல்படத் தொடங்கிவிட்டனர். ரஜினியின் அனுமதிக்குக் கூடக் காத்திருக்கவில்லை! பா.ம.க. எங்கு போட்டியிட்டாலும் அவர்களைத் தோற்கடிப்பதே தங்கள் வேலை என்று கருதுகிறார்கள்.

இதற்கிடையில் சமீபத்தில் ரஜினியை 'சேற்றில் விழுந்த பன்றி' என்று டாக்டர் ராமதாஸ் விமரிசித்தாக நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியை மறுத்த ராமதாஸ், அந்நாளேட்டின் சென்னை அலுவலக முன்பு பத்திரிகை களைத் தீயிட்டுக் கொளுத்தித் தன் எதிர்ப்பை வெளியிட்டார்.
ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் வாராந்திர இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ''ரசிகர்கள் யார் சொன்னாலும் கேட்கிற மனநிலையில் இல்லை..'' என்கிறார்.
கேடிஸ்ரீ |