ராசியான அசின்
அசின் நடித்து இதுவரை வெளிவந்த படங்கள் எல்லாம் வெற்றியை பெற்றதையடுத்து தமிழ் திரைப்பட உலகில் ராசியான நடிகையாகிவிட்டார் அசின். இதுவரை இவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களில் 'உள்ளம் கேட்குமே' தவிர மற்ற நான்கு படங்களும் வெற்றி பெற்றுள்ளன. அசினின் தொடர் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் இவர் வீட்டை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். தற்போது 'போக்கிரி', 'ஆழ்வார்', 'தசாவதாரம்' ஆகிய படங்களில் பிசியாக இருக்கும் அவருக்கு மேலும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கின்றன. எல்லாம் ராசி படுத்தும் பாடு!

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com