மணிரத்னத்தின் படத்தில் பாரதிராஜா
'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்துக்குப் பிறகு கொஞ்சம் இடைவெளி. மணிரத்னம் இப்போது 'ஆயுத எழுத்து' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 'யுவா' என்கிற பெயரில் இந்தியிலும் வெளிவர இருக்கிறது.

தமிழில் மாதவன், சூர்யா, த்ரிஷா, மீரா ஜாஸ்மின் நடிக்க இந்தியில் அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாதவன் இதுவரை ஏற்று நடிக்காத பாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்ல வளர்ந்து வரும் சூர்யாவிற்கு மற்றொரு மைல்கல் இப்படம். இதில் மாணவர் சங்கத்தலைவராக நடிக்கிறாராம்.

பாரதிராஜாவின் நெடுநாள் நடிப்பு ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறுகிறது. ஆம், இப்படத்தில் பாரதிராஜா வில்லனாக வந்து எல்லோரையும் மிரட்டுகிறார்.

ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது 'ஆயுத எழுத்து'.

கேடிஸ்ரீ

© TamilOnline.com