மார்ச் 2004: குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்காக

5. சாம்பாருக்கும் பேய் வாழ்வதற்கும் தேவையானது (6)
6. முகத்தில் வீசலாம், ஆனால் வயலில் வளரக்கூடாது (2)
7. அமிழத் தொடங்கிய கப்பல் குறுகியதல்ல (4)
9. வள்ளி தலையிடக் கள்ளி போற்றும்படியான பாதம் (4)
10. குள்ளநரி ஆரம்பித்த தந்திரம் இடக்கானது (4)
12. பக்தன் தவத்தால் பெறுவது இறுதியான பாதுகாப்பு எல்லை (4)
13. மனம் சம்பந்தப்பட்டவை இருக்கின்றன (2)
14. அசைவ உணவு மாறி மாறிக் கட்டு (6)

நெடுக்காக

1. கைக்குழந்தைகள் ஆடுவதற்குப் பெண்பால் பொடியோ? (2)
2. ஒரு காலத்தில் சேரனின் கொடி பறந்த சீன எல்லை (4)
3. கல்லில்லாக் கம்மல், நிதி சேர அமைதி (4)
4. சம்பிரதாயக் கடிதத்தின் மூன்றாம் சொல் கர்வ நுழைவால் ஊர்சுற்றி வருவது (6)
8. கருமை எள்ளவியும் எருமை ஓடப் பாட்டெழுதும் நெஞ்சம் (6)
11. உறுதியாக எழுதிட மாகவி மறைத்தான் (4)
12. ரீங்காரிகள் வாழ்கின்ற மணமாலையெனச் சிறப்பிப்பர் (4)
15. கொம்பு கணக்குப் போடு (2)

வாஞ்சிநாதன்
vanchinathan@vsnl.net

விடைகள்

குறுக்காக: 5 புளியமரம் 6 களை 7 அகலம் 9. திருவடி 10 குயுக்தி 12 வரம்பு 13 உள 14 மாட்டுக்கறி
நெடுக்காக: 1 தூளி 2 இமயம் 3 நிம்மதி 4 நகர்வலம் 8 கவியுள்ளம் 11 திடமாக 12 வண்டுறை 15 கழி

© TamilOnline.com